என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விரல்கள்"
- உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
- விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இரண்டு தலைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தைகளை பார்த்து இருக்கிறோம். மேலும் கை, கால் இல்லாமல் பிறந்த குழந்தைகள் பற்றியும் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் பின்வருமாறு:-
பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இதை பார்த்து டாக்டர்களும், பாரதி மற்றும் அவரது குடும்பத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், "பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை" என்றனர்.
- கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது.
- குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக எல்லோருக்கும் 2 கைகளிலும் 10 விரல்கள், 2 கால்களிலும் 10 விரல்கள் என 20 விரல்கள் தான் இருக்கும். அரிதாக 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகளை சில நேரங்களில் காண முடியும். அப்படி 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகள் அரிது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் 24 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அங்குள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், கோரட்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது. இது அரிதிலும் அரிது என்று டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அந்த குழந்தையை தெய்வத்தின் அவதாரம் என்று கூறி வழிபட்டு செல்வதோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 24 விரல்களுடன் பிறந்த அந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்