என் மலர்
நீங்கள் தேடியது "Speed brake"
- 1500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- பள்ளி முன்பு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தன.
காங்கயம் :
காங்கயம் தாராபுரம் மெயின்ரோட்டில் நகரின் பிரதான பகுதியான களிமேடு மற்றும் குதிரை பள்ளம் ரோடு பிரிவு அருகே காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி முன்பு நிழற்குடை மற்றும் வேகத்தடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பள்ளி முன்பு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தன. இது குறித்து மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தற்போது அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்ரூ.9லட்சம் செலவில் அழகான விசா லமான முறையில் ஒரு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. காங்கயம் நகராட்சி மற்றும் காங்கயம் ரோட்டரி டவுன் சங்கம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.