என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குப்பை கிடங்கல்"
- அன்றன்றே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கழிப்பிடத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகே உள்ள குப்பை கிடங்கில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப் பட்டு வருகிறது.இந்நிலையில் கடலூர் செயற் பொறியாளர் கருப்பையா, விழுப்புரம் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் குப்பை கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மலைபோல் குவிந்து உள்ள பழைய குப்பைகளை உடனடியாக தரம் பிரித்து அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் குப்பைகளை குப்பைக்கிடங்கில் கொட்டி அன்றன்றே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தையும் ஆய்வு செய்தனர். கழிப்பிடத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது சின்னசேலம் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.