search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 தவணைகள்"

    • மின் கட்டணத் தொகையை தவணை முறையில் செலுத்தவும், அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • கோவை, திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

    மங்கலம்:

    விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை 6 தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் பொருளாளா் காரணம்பேட்டை பூபதி கூறியதாவது:-

    கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் சாா்பில் சென்னையில் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மின்சார வாரிய தலைவா் ராஜேஷ்லக்கானி, இயக்குநா் சிவலிங்கராஜன் ஆகியோரை சந்தித்து விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை தவணை முறையில் செலுத்தவும், அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடா்ந்து உடனடியாக 6 தவணைகள் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராத தொகையை ரத்து செய்வது குறித்து கணக்கீடு செய்து பரிசீலிப்பதாக இயக்குநா் உறுதியளித்தாா்.இதற்காக கோவை, திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

    ×