என் மலர்
நீங்கள் தேடியது "ஏவுகணை ஜப்பான்"
- வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
- ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
டோக்கியோ:
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.
சமீபத்தில் ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஏவுகணை ஜப்பான் பகுதிக்குள் விழவில்லை.
இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும், ஏவுகணை இடைமறிப்பு கருவிகளை செயல்படுத்தவும் தயாராக இருக்கும்படி ராணுவத்துக்கு ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் மந்திரி யசுகாசு ஹமாடா, ராணுவத்திடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.