என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேசியவாத காங்கிரஸ் கட்சி"
- பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
- அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
கூட்டணியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி வகித்து வருகிறார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி.
- பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சரானர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்திருக்கிறார். இதனால், அஜித் பவாரின் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதன்படி, கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், மூத்த தலைவரான சரத் பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு, அணியின் பெயரை தேர்ந்தெடுக்கும்படி சரத் பவார் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார்.
இதன்படி, வருகிற 7-ந்தேதி பிற்பகல் 3 மணிக்குள், அவர்களுடைய அணியின் பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி, கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சரானர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் நேற்று பதவியேற்றார்.
- இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகரிடம், தகுதி நீக்க மனு ஒன்றை நாங்கள் வழங்கி உள்ளோம்.
அதற்கான நகல்களை விரைவில் அனுப்புவோம். இந்த தகுதி நீக்க மனு அஜித் பவார் உள்பட 9 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியை விட்டுச் செல்கிறோம் என அவர்கள் எந்தவொரு நபரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது.
அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.
- அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக வதந்திகள் பரவின.
- பா.ஜனதாவுக்கு ஆதரவாக அஜித்பவார் பேசியிருந்தார்.
மும்பை :
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக வதந்திகள் பரவின. இதை உறுதி படுத்தும் விதமாக பா.ஜனதாவுக்கு ஆதரவாக அவர் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "சாம்னா"வில், "தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாராவது தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவில் இணைந்தாலும், ஒரு கட்சியாக தேசியவாத காங்கிரஸ் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காது" என சரத்பவார் கூறியதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தன்னை சுற்றி உலவும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், "தான் உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன்" என்று தெரிவித்து இருந்தார்.
அத்துடன் தனக்கு முதல்-மந்திரியாக 100 சதவீதம் விருப்பம் இருப்பதாகவும், 2024-ம் ஆண்டு மாநில சட்டசபை தேர்தல் வரை காத்திருக்க தேவையில்லை, தற்போது கூட முதல்-மந்திரி பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி உரிமை கோரலாம் என கூறி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார், "நாளை யாராவது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயன்றால், அது அவர்களது வியூகம். ஆனால் கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இன்று இதை பற்றி பேசுவது முறையற்றது. ஏனென்றால் நாங்கள் இந்த பிரச்சினையை பற்றி விவாதிக்கவில்லை" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்