என் மலர்
நீங்கள் தேடியது "ஜெகன்நாத் கோவில்"
- லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.
- இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை.
லண்டன்:
ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வநாத் பட்நாயக். தொழிலதிபர். பைனஸ்ட் கம்பெனியின் நிறுவனரான இவர் லண்டனில் கோவில் கட்ட ரூ.250 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிதியில் லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.
அட்சய திருதியையொட்டி இந்த நிதியுதவியை அவர் வழங்கினார்.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை. இவர்தான் முதன்முதலில் ரூ.250 கோடி வழங்கி யுள்ளார். இந்த கோவில் கட்ட ரூ.70 கோடியில் 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. லண்டனின் புறநகரில் இந்த கோவில் கட்டப்படுகிறது.