என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேமிப்பு தளங்கள்"
- காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனத்தில் ரூ.23.74 கோடியில் நவீன சேமிப்பு தளங்கள் திறக்கப்பட்டது.
- இதனை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மேற்கூரையுடன் நவீன சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன், காரைக்குடி வட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-
கடந்த 11.2.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் முதல்கட்டமாக திருப்புவனம் வட்டம் ஏனாதியில் ரூ4.23கோடி மதிப்பீட்டிலும், காரைக்குடி வட்டம் பள்ளத்தூரில் ரூ12.97கோடி மதிப்பீட்டி லும், மானாமதுரை வட்டம், சிப்காட்டில் ரூ10.83 கோடி மதிப்பீட்டிலும் மொத்தம் ரூ28.03 கோடி மதிப்பீட்டிலும் புதியதாக கான்கீரிட் தளத்துடன் கூடிய கட்டப்பட்டுள்ள மேற்கூரைகளை காணொலிக்காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்பு தளங்களை மேற்கண்ட 3வட்டங்களில் இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். அதன்படி காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பள்ளத்தூரில் 22ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்பு மேடைகளை ரூ16.21 கோடி மதிப்பீட்டிலும், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட ஏனாதியில், 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்பு மேடைகளை ரூ5.42 கோடி மதிப்பீட்டிலும், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட சிப்காட்டில் 2ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல்சேமிப்பு மேடைகளை ரூ2.11 கோடி மதிப்பீட்டிலும் ஆகிய 3 வளாகங்களிலும் 2-ம் கட்டமாக முடிக்கப்பட்டுள்ள மொத்தம் 29ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 நெல்சேமிப்பு தளங்கள் மொத்தம் ரூ23.74 கோடி மதிப்பீட்டில் முதல்-அமைச்சரால் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்கு உரிய லாபம் முழுமையாக கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், தமிழக அரசால் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்) அருண்பிரசாத், பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சங்கர் (பள்ளத்தூர்), ராதிகா (கானாடுகாத்தான்), முகமுது மீரா(புதுவயல்), உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்