search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்யா கணபதி கோவில்"

    • 4-ம் கால பூஜை, தீபாராதனை, கலசங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் ஆகியவை தொடர்ந்து கும்பாபிஷேகம் தொடங்கியது.
    • 6 சுவாமிகளின் கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கோவிலில் வித்யா கணபதி மற்றும் அதன் பரிவார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணிய சுவாமி, சரஸ்வதி தேவி, ஹயக்ரீவர், பிரம்மா ஆகிய தெய்வங்கள் உள்ளன. இவைகளை அழகிய கலை அம்சத்துடனும், சிற்ப சாஸ்திரப்படியும் பள்ளி நிர்வாகம் வடிவமைத்தது. அதை தொடர்ந்து ஆன்மிக முறைப்படி மகா கும்பாபிஷேகமும் நடத்த பள்ளியின் ஜேசீஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை விநாயகர் வழிபாடு, 4-ம் கால பூஜை, தீபாராதனை, கலசங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் ஆகியவை தொடர்ந்து கும்பாபிஷேகம் தொடங்கியது.

    இதில் கூனம்பட்டி ஆதினம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, மடவளாக ஆதினம் ஆருத்ர கபாலீஸ்வர குருசுவாமிகள், வீர சோழபுரம் ஆதினம், வேதாந்தபண் மதகுரு சுவாமிகள் மற்றும் சிவச்சாரியார்கள் , 6 சுவாமிகளின் கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    விழாவில் பள்ளியின் ஜேசீஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், அங்கத்தினர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், கணேசமூர்த்தி எம்.பி., காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்குமார், துணை தலைவர் ஜீவிதா ஜவகர், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி, காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் தாலுகாவின் தமிழர் பாரம்பரிய கலைமன்ற நிர்வாகி லதா, தனியார் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.கே. சிவானந்தன், காங்கயம் நகர அ.தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு வங்கியின் தலைவருமான வெங்கு மணிமாறன், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம். ராமசாமி, காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி, காங்கயம் தாலுகா தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.எஸ்.என். தனபால், காங்கயம் ஆத்மா அறக்கட்டளையின் தலைவர் சன். பழனிசாமி, மடவளாகம் ஆருத்ர கபாலீஸ்வரா் கோவிலின் நிர்வாகிகள், ஜேசீஸ் பள்ளியின் பெற்றோர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பய பக்தியுடன் சுவாமிகளை வழிபட்டனர். முன்னதாக விழாவில் மங்கள இசை, தீபாராதனை, முளைப்பாரி எடுத்து தீர்த்தக்குடத்துடன் அழைத்து வருதல், முதற்கால, 2-ம் கால, 3-ம் கால பூைஜகள், யாக வேள்வி பூஜை, கோமாதா பூைஜ நடந்–தது. மேலும் கோமாதா பூஜை, வாழும் கலை அமைப்பின் திவ்ய சத்சங்க நிகழ்ச்சி, வெற்றி வேலன் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சங்கமம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் விழாவில் பங்கு கொண்ட முக்கியஸ்தர்களுக்கு பள்ளியின் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து விழாவின் 4 நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜேசீஸ் கல்வி அறக்கட்டளை துணை தலைவர் உமா தேவி அர்ச்சுணசாமி, செயலாளர் மற்றும் தாளாளர் சி.பழனிசாமி, துணை செயலாளர் சம்பத், பொருளாளர் மோகன சுந்தரம், முன்னாள் பொருளாளர் அசோகன், மற்றும் அங்கத்தினர்களான கொங்கு ராஜன், மதியழகன், சுப்பிரமணி, டாக்டர் ஆனந்த் விஷ்ணு, அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், பிரேம்சுதா மற்றும் பள்ளியின் முதல்வர் பி.சுப்பிரமணி, ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் கோவிலின் 48 நாட்களுக்கான மண்டல பூஜை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து நடைபெறுகிறது.

    ×