search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.சி."

    • கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.
    • கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் உயர் கல்வியில் சேருவதற்கான நடை முறைகளை பின்பற்றி வருகின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.

    என்ஜினீயரிங், கலை அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் உற்சாகத்துடன் விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆண்டு வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    அதனால் கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சேருவதற்கு போட்டி போட்டு விண்ணப்பிக்கின்றனர்.

    அரசு கலைக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் படிக்க ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிப்பதற்கு வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரசு கல்லூரிகளை நாடுகின்றனர்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போதும். படிப்பு செலவு (சுமை) இல்லாமல் போய் விடும் என பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பி.காம் (பொது), பி.காம் (நிதி), கார்பரேட் மற்றும் பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை தெரிவு செய்து இடங்களை புக் செய்து உள்ளனர்.

    சென்னையில் உள்ள டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிக்க அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் செல்வாக்கை பயன்படுத்தி சிபாரிசு கடிதம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    லயோலா கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, ஸ்டெல்லா மேரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் பி.காம் இடத்திற்கு அலை மோதுகிறார்கள்.

    கட்-ஆப் மார்க் அடிப் படையில் மாணவர் சேர்க்கை என்றாலும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இடம் வாங்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

    இதுதவிர பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, மாநில கல்லூரி போன்ற அரசு கலைக் கல்லூரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏ. அமைச்சர்களின் சிபாரிசு கடிதம் பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

    ஒரு சில கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கும் போட்டி ஏற்பட்டு உள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இது வரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலை ஈடுபட்டுள்ளது.
    • புதிய பாடத்திட்டத்தை கையாளும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    உடுமலை :

    தேசிய அளவில் வேளாண் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி., இயற்கை விவசாயம் படிப்பை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐ.சி.ஏ.ஆர்.,) திட்டமிட்டுள்ளது. இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலை ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் சார்ந்த உற்பத்திகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், பி.எஸ்சி., இயற்கை விவசாயம் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, ஐ.சி.ஏ.ஆர்.,திட்டமிட்டுள்ளது.

    புதிய பாடத்திட்டத்தை கையாளும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதற்கான ஓர் மையமாக கோவை வேளாண் பல்கலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து வேளாண் பல்கலை நம்மாழ்வார் ஆர்கானிக் மைய துறைத்தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், தேசிய அளவில் இயற்கை விவசாயம் சார்ந்த, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நான்கு பல்கலைக்கழங்களில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் ஒன்று. புதிதாக துவங்க திட்டமிட்டுள்ள பி.எஸ்சி., இயற்கை விவசாயம் படிப்புக்கு ஆசிரியர்களை தயார் செய்ய வேண்டியுள்ளது.

    வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வரும் கல்வியாண்டிலேயே, முதல்கட்டமாக மத்திய வேளாண் பல்கலைகழகங்களில் இப்பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படலாம் என்றார்.

    ×