என் மலர்
நீங்கள் தேடியது "மே தின நினைவு சின்னம்"
- மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி சிறப்புரையாற்றுகிறார்.
- நிர்வாகிகள், தொழிலாளர்கள் கருப்பு, சிவப்பு சீருடையுடன் பேரவை கொடியுடன் வர வேண்டும்.
சென்னை:
மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலையில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை சார்பில் மே தின விழா நாளை மே தின பூங்காவில் நடைபெறுவதையொட்டி அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி சிறப்புரையாற்றுகிறார்.
இதையொட்டி தொ.மு.ச. பேரவை இணைப்புச் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கருப்பு, சிவப்பு சீருடையுடன் பேரவை கொடியுடன் வர வேண்டும் என்று தொ.மு.ச. பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி. வேண்டுகோள் விடுத்து உள்ளார்.