என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் தீப்பிடிப்பு"

    • ஸ்டார்ட் செய்ய முயற்சித்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். இவர் சென்னையில் போலீசாக வேலை செய்து வருகிறார்.

    இவரது கார் வீட்டின் அருகே பயன்படுத்தப்படா மல் நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராஜ்குமாரின் மகன் நேற்று காலை காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப் போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜய குமார் தலைமையில் பாண்டியன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×