என் மலர்
நீங்கள் தேடியது "பாசன அணை"
- கோடைமழை பரவலாக பெய்கிறது.
- அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது
உடுமலை :
வால்பாறையில் ஆண்டு தோறும் பெய்யும் மழை நீரை சேமித்து, குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக கோடைமழை பரவலாக பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகளும், சுற்றுலாபயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சோலையாறு அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.அணையில் நீர்மட்டம் சரிந்து இருந்த போது, பரம்பிக்குளம் அணைக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது நீர்வரத்து ஏற்பட்டதும், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.