என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவீன் உல்-ஹக்"
- சன்ரைசர்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- இன்றைய போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்னுக்கு மேல் குவித்து வியக்க வைத்த ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது.
இருப்பினும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறும்பட்சத்தில் அந்த அணி தடாலடியாக சரிவை சந்திக்கிறது.
கடந்த 4 ஆட்டங்களில் 3 சறுக்கலை சந்தித்துள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் நிர்ணயித்த 174 ரன் இலக்கை மும்பை அணி 17.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தது அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. எனவே அந்த அணி சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 444 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (339), அபிஷேக் ஷர்மா (326), நிதிஷ்குமார் ரெட்டியும், பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமாரும் வலுசேர்க்கிறார்கள்.
கடந்த சில ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மாவும், ஹென்ரிச் கிளாசெனும் நிலைத்து நின்று ஆடாதது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. மேலும் ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.
லக்னோ அணி
லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.
லக்னோ அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மண்ணை கவ்வியது. 236 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் 137 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (36 ரன்), லோகேஷ் ராகுல் (25 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த மோசமான தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் லக்னோ அணி உள்ளது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதம் உள்பட 431 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 352 ரன்), நிகோலஸ் பூரன் (315 ரன்), குயின்டான் டி காக் நல்ல நிலையில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர்
மயங்க் யாதவ் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதுடன், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணியின் பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பந்து வீச்சில் யாஷ் தாக்குர், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கிறார்கள். குருணல் பாண்ட்யா ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.
வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.
லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிலோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக், மொசின் கான் அல்லது யாஷ் தாக்குர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதிய ஆட்டத்தில் லக்னோ வீரர் நவீன் உல்-ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது.
அதன் பிறகு விராட் கோலி ஆட்டத்தில் தடுமாறும் போதும், பெங்களூரு அணி தோல்வியை தழுவும் போதும் மாம்பழங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து 'இன்பமாய் இருக்குதய்யா' என சொல்வது போல பதிவிட்டு வந்தார் நவீன் உல்-ஹக். அதே நேரத்தில் அந்த சீசன் முழுவதும் அவர் களத்தில் ஃபீல்ட் செய்யும் போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோலி பேட் செய்தபோது அவருக்கு நவீன் உல் ஹக் பந்து வீசி இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அதோடு இருவரும் அணைத்துக்கொண்டனர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
இந்த சம்பவங்கள் குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் பாய் மற்றும் நவீன் உல்ஹக் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- உலகக் கோப்பை போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் உல்-ஹக் சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.
- 24 வயதான நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டியில் ஆடி 22 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஆமதாபாத்:
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றி, 5 தோல்வியுடன் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணி நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. நடப்பு தொடரில் 8 விக்கெட் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் முந்தைய ஆட்டத்தில் 6.3 ஓவர்கள் பந்து வீசி 52 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் உல்-ஹக் சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
24 வயதான நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டியில் ஆடி 22 விக்கெட்டும், 27 இருபது ஓவர் போட்டியில் ஆடி 34 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
- 17-வது ஓவரில் லக்னோ வீரர் நவீன் உல்-ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது நவீன் மற்றும் கோலியும் மீண்டும் மோதிக்கொண்டனர்.
லக்னோ:
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இப்போட்டியில் லக்னோவை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது
இந்த போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்ற நிலையில் போட்டியின் போதும், போட்டிக்கு பின்னும் பரபரப்பான சூழ்நிலையே நிலவியது. லக்னோ பேட்டிங் செய்தபோது 17-வது ஓவரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோலியும், நவீனும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் நடுவர் பிரச்சினையை சமரசம் செய்துவைத்தார்.பின்னர், பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ வீரர் நவீன் பெங்களூரு வீரர் கோலியும் மீண்டும் மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில் நவீன் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
நவீன் வெளியிட்ட பதிவில்:- உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கிடைத்தே தீரும். அதுதான் வழக்கம்.
என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக வாக்குவாதத்தில் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் ஆகியோர் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்