search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரவீண் அம்ரே"

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன.
    • அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன.

    குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவீண் அம்ரே குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன. அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.

    அதனால், நாம் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். நமது பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் சவாலானதாக இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது.

    அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள். நடந்து முடிந்ததை நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் நிகழ்காலத்தில் நடக்க வேண்டியதை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த யோசனையில் ஈடுபட்டிருக்கிறோம். டெத் ஓவர்களிலும் நாங்கள் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டியது இருக்கிறது.

    அதையும் நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

    டெல்லி அணியின் துணை கேப்டன் அக்சர் படேலுக்கு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உள்ளது. ஆட்டத்தை ஜெயித்து கொடுக்க அவரது பங்களிப்பு நிச்சயம் தேவை.

    அவர் சிக்சர்களை இந்த சீசனில் அதிகம் அடித்திருக்கிறார். அவரை முதலில் களமிறக்காமல், கடைசியாக இறக்க சில நேரங்களில் முடிவு செய்வோம். ஏனென்றால் அவரை சிறந்த ஃபினிஷர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×