என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அவினாசி காமாட்சி அம்மன் கோவில்"
- கோவிலில் பூச்சாட்டு விழா 25ந் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
- நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.
அவிநாசி:
அவிநாசி காந்திபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் நேர்ந்து கொண்ட பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர்.கோவிலில் பூச்சாட்டு விழா 25ந் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, அம்மன் அழைத்தல் ஆகியன நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் விழா நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர்கள் சமூக வீர மக்கள், தங்கள் முதுகில் அலகுகுத்தி, சுவாமி தேரை இழுத்து சென்றனர். நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.
முன்னதாக நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் உட்பட பெண்கள், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்துநான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர். பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.