search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை ஏழு குளம்"

    • ஏழு குளங்களில் பெரிய குளம் 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும் உடையதாகும்.
    • அடுத்த ஆண்டுக்கு அரசு உத்தரவு அடிப்படையில் நீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருமூர்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் வாயிலாக ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நேரடியாக 2,700 ஏக்கர் நிலங்களும், சுற்றுப்புற கிராமங்களின் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    ஏழு குளங்களில் பெரிய குளம் 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையதாகும். இக்குளத்தில் 9.60 அடி நீர் மட்டமும், 57.10 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது.

    செங்குளம் 10 அடி நீர் மட்ட உயரமும், 12.74 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். இதில் 8.30 அடி நீர் மட்டமும், 9.76 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. ஒட்டுக்குளம் 10 அடி நீர் மட்ட உயரம், 14.11 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையதாகும். இங்கு 9.20 அடி நீர் மட்டமும், 10.80 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.செட்டிகுளம் 7.5 நீர் மட்ட உயரம், 7.93 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இங்கு 6.70 அடி நீர் மட்டமும், 6.14 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    தினைக்குளம் 9.25 அடி நீர் மட்ட உயரம், நீர் கொள்ளளவு 7.23 மில்லியன் கன அடியாகும். இங்கு 8.80 அடி நீர் மட்டமும், 6.92 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கரிசல் குளம் 7.65 அடி நீர் மட்டம், 2.92 மில்லியன் கன அடி நீர் இருப்பு கொண்டது. இங்கு 7.50 அடி நீர் மட்டமும், 2.90 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. அம்மாபட்டி குளம் 4.50 அடி நீர் மட்டம், 1.76 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையதாகும். 3.50 அடி நீர் மட்டமும், 1.60 மில்லியன் கன அடி நீர் இருப்பும் காணப்படுகிறது.வலையபாளையம் குளம் 10.33 அடி நீர் மட்டமும், நீர் கொள்ளளவு 7.63 மில்லியன் கன அடி உடையதாகும். இங்கு 4.10 அடி நீர் மட்டமும், 3.09 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த ஆகஸ்டு முதல் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கு அரசு உத்தரவு அடிப்படையில் நீர் வழங்கப்படும் என்றனர். 

    ×