என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெள்ளகோவில் சாலை"
- பல்வேறு பகுதிகளில் இருந்து 50 விவசாயிகள் தங்களுடைய 916 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
- முத்தூரில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.21.46 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வள்ளிப்பட்டி, வாகரை, காவல்பட்டி, விராலிபட்டி, சுள்ளெறும்பு, கொத்தயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50 விவசாயிகள் தங்களுடைய 916 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 45 ஆயிரத்து 87 கிலோ.ஈரோடு, சித்தோடு, நடுப்பாளையம், முத்தூரில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.
சூரியகாந்தி விதை கிலோ ரூ. 42.89 முதல் ரூ.51.39 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 47.52.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 21.46 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
- கோவை -திருச்சி பிரதான சாலையில் வெள்ளகோவில் அருகே இரட்டை கிணறு என்ற இடத்தில் சாலையோரத்தில் ஒரு கிணறு உள்ளது.
- திருச்சி, தஞ்சை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன.
வெள்ளகோவில்:
கோவை -திருச்சி பிரதான சாலையில் வெள்ளகோவில் அருகே இரட்டை கிணறு என்ற இடத்தில் சாலையோரத்தில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றிற்கு தடுப்பு சுவர் இல்லை .அதற்கு பதிலாக தற்காலிகமாக தகரத்தாலான தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பு வைக்கப்பட்டு இருப்பதால் இரவு நேரங்களில் இருபுறமும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க இடமில்லாமல் தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது
இந்த சாலையின் வழியாக திருப்பூர், கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலத்திற்கும் கிழக்கு மார்க்கமாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். ஆகையால் உடனே இந்த பிரதான சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தடுப்பான்களை அகற்றி பாதுகாப்பான நிலையில் கிணற்றின் அருகே தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமாறு வாகன ஓட்டிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்