search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருத்திமான் சஹா"

    • விரித்திமான் சஹாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது.
    • இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    கொல்கத்தா:

    இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் விருத்திமான் சஹா. அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது. அவர் மாநில அளவிலான உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் 2024 - 25 ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக ஆடி வரும் விரித்திமான் சஹா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரே தனது கடைசி தொடராக இருக்கும் என அறிவித்து இருக்கிறார்.

    விரித்திமான் சஹாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3 சதம் மற்றும் 6 அரை சதம் அடித்து இருக்கிறார்.

    டெஸ்ட் போட்டிகளில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 2010 முதல் 2014 வரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 41 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவர் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்து விக்கெட் கீப்பராக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. அவர் பேட்ஸ்மேன் ஆக அதிக ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் தான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சாஹா தனது கடைசி டெஸ்ட் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2021 இல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

    ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "நேசத்திற்குரிய கிரிக்கெட் பயணத்தில் இந்த ரஞ்சி டிராபி சீசனே எனது கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை கடைசியாக பெங்கால் அணிக்காக ஆட இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த சீசனை எப்போதும் மனதில் வைத்து இருப்பேன்." என்று பதிவிட்டிருந்தார்.

    • விராட் கோலி இன்ஸ்டா பதிவில் என்ன ஒரு வீரர் என்று பாராட்டியிருந்தார்.
    • இந்த சீசனில் இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடிய சஹா, 273 ரன்கள் வரையில் அடித்துள்ளார்.

    நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 51-வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பம் முதலே சஹா அதிரடி காட்டி ஆடினார். அவர் 20 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி குஜராத் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 21 பந்துகளிலும், 24 பந்துகளிலும் விஜய் சங்கர் அரைசதம் அடித்திருக்கிறார். தொடர்ந்து ஆடிய சஹா 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹாவின் பேட்டிங்கை கண்டு வியந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி கூட இன்ஸ்டா பதிவில் என்ன ஒரு வீரர் என்று பாராட்டியிருந்தார்.

    இந்த சீசனில் இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடிய சஹா, 273 ரன்கள் வரையில் அடித்துள்ளார். இதில் 7 சிக்ஸர்கள், 35 பவுண்டரிகள் அடங்கும். அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்குப் பதிலாக விருத்திமான் சஹா இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக சென்னை அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

    அதே போன்று தற்போது ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஹா, கேஎல் ராகுலுக்குப் பதிலாக இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய பந்து வீச்சாளரான தொட்டா கணேஷ் இந்த யோசனையை கூறியிருக்கிறார். வரும் ஜூன் 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×