search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் உலகக்கோப்பை 2023"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார்.
    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

    அகமதாபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை கைப்பற்றியது.

    இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை வென்ற 4-வது கேப்டன் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்.


    அதுபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றார்.


    அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் 2018-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் செய்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றார்.


    இந்த வரிசையில் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.


    கிரிக்கெட்டில் இதுபோன்ற சுவாரஸ்மான விஷயங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.

    • அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர்.
    • ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் உள்ளன. இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஒவ்வொரு அணியும், சுழற்பந்து வீச்சாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருப்பார் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

    குல்தீப் யாதவுடன் ஐ.பி.எல். போட்டியில் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும். அதை இந்திய அணி நிர்வாகம் செய்திருக்கிறது.

    குல்தீப் யாதவ் எங்களுக்கு (இந்திய அணி) ஒரு துருப்பு சீட்டாக இருப்பார். அவரை பெரும்பாலான அணிகள் சவாலாக கருதுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினர்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 5 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்.

    இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதல் 2 ஆட்டங்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரோகித் சர்மா கூறும்போது, "குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாங்கள் நிறைய விஷயங்களை யோசித்தே குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை எடுத்தோம்.

    உலகக்கோப்பைக்கு முன்னதாக குல்தீப் யாதவை அதிகம் வெளிப்படுத்த விரும்பாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக அவரை பார்த்து கொண்டிருக்கிறோம்.

    அதனால்தான் அவரை அதிகம் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் இரண்டு ஆட்டங்களுக்கு வெளியே அமர்ந்து 3-வது ஆட்டத்தில் விளையாடுவது எங்களுக்கு சிறந்த முடிவாகும்" என்றார்.

    • ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
    • உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் முன்னேறும் என்று நினைக்கிறேன். அதேபோல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதனால் ஆஸ்திரேலியா, கொஞ்சம் முழு வலிமை கொண்ட அணியை உலகக்கோப்பைக்கு பெறுவார்கள்.

    ஆடம் ஜம்பா உலக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர். அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முழு திறமையை காட்டி உள்ளார். தற்போது அவருக்கு 50 ஓவர் உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தனது அனுபவத்தை, எதிரணி பேட்டிங் வரிசைக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். பயமின்றி விளையாட வேண்டும். டேவிட் வார்னர், முன் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். அவர் எப்போதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை கொண்டவர். அவர் நன்றாக விளையா டினால் எதிரணியினர் பயப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணித் தேர்வின் ஆலோசனையில் நிறைய வீரர்கள் குறித்து பரிசீலித்தோம்.
    • தற்போது பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

    உலகக் கோப்பை அணியை அறிவித்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீரர்கள் அணியில் தங்களது இடத்திற்கு போராடுவது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல. சவால்கள் அதிகரிக்கும் போது அணித் தேர்வும் கடினமாகி விடுகிறது. ஆனால் யார் பார்மில் இருக்கிறார்? எதிரணி எது? இது போன்ற சூழலில் சிறப்பாக செயல்படும் வீரர் யார்? எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். இப்படி நடக்கும் போது நாம் விளையாடும் அணியில் சிலரை தவற விடுகிறோம். இது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று தான். அணியின் நன்மைக்காக இப்படி கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டியுள்ளது.

    அணித் தேர்வின் ஆலோசனையில் நிறைய வீரர்கள் குறித்து பரிசீலித்தோம். இறுதியில் 15 பேர் கொண்ட மிகச்சிறந்த அணியை தேர்வு செய்திருப்பதாக நம்புகிறோம். எங்களது கன கச்சிதமான அணிச்சேர்க்கை இது தான். அணித் தேர்வு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முழுமையான ஒரு வீரர். பேட்டிங்கும் செய்கிறார். பந்தும் வீசுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது அருமையான பேட்டிங்கை பார்த்து இருப்பீர்கள். அத்துடன் கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பந்து வீச்சிலும் முத்திரை பதிக்கிறார். உலகக்கோப்பை போட்டியில் அவரது 'பார்ம்' நமக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

    தற்போது பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை நீங்கள் பார்த்தாலே ஏன் அணியில் ஆல்-ரவுண்டர் தேவை என்பது புரிந்திருக்கும். அந்த ஆட்டத்தில் நாம் 266 ரன்கள் எடுத்திருந்தோம். இன்னும் பேட்டிங் தெரிந்த பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கூடுதலாக 15 ரன் கிடைத்திருக்கும். இந்த 15 ரன் வித்தியாசம் என்பது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கக்கூடியது. எனவே பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் குறித்து பல முறை பேசி இருக்கிறேன். இதனால் அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு 4 ஆல்-ரவுண்டர்கள் (பாண்ட்யா, ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்குர்) தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    அதுமட்டுமின்றி சில சமயம் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்கள் விட்டுக்கொடுக்கும் போது, அவர்கள் தங்களது 10 ஓவர்களை முழுமையாக வீச முடியாத நிலை உருவாகும். அப்போது ஆல்-ரவுண்டர்கள் கைகொடுப்பார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அணியில் ஆல்-ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும்.
    • இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    டெல்லி:

    இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்திலும், இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா ஆல்-அவுட் செய்து வீழ்த்தும் என ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக இருக்கும். இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும். ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும். இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போதைய ஐபிஎல் தொடரில் மிட்செல் மார்ஷ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×