என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு"
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி அரை சதம் விளாசினார்.
- அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, பட்டிதார் 50 ரன்கள் குவித்தனர்.
அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐ.பி.எல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் கோலி படைத்து உள்ளார்.
அந்தவகையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு 505 ரன்களும், 2016 -ம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார்.
2019-ம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ரன்களும், 2020-ம் ஆண்டு 466 ரன்களையும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், 2021-ம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ரன்களும், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்லின் 17-வது சீசனில் 400 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். இவ்வாறாக இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் சுமார் 10 சீசனில் 400-க்கும் அதிகமான ரன்கள எடுத்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
- ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
- பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டி ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டியாகும்.
- ஆகாஷ் தீப் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும், ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார்.
சூர்யகுமார் யாதவ் 52 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைசாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
- பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் பெங்களூரு அணி சரிவில் இருந்து மீண்டது. போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
- ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இரு அணிகளும் அதிக தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இதில் 14-ல் பெங்களூருவும், 18-ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளன.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மல்லுக்கட்டுகிறது.
இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. ஒரு வழியாக உள்ளூரில் நடந்த கடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், ரோகித் சர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், ஒரே ஓவரில் 32 ரன் விளாசிய ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி 234 ரன்கள் குவித்ததோடு, அதை வைத்து டெல்லியை 205 ரன்னில் கட்டுப்படுத்தியது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஆட்டத்தில் டக்-அவுட் ஆனார். என்றாலும் இன்றைய ஆட்டத்தில் அவரது வாணவேடிக்கையை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். சாதகமான உள்ளூர் சூழலை பயன்படுத்தி தொடர்ந்து 2-வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் மும்பை அணியினர் ஆயத்தமாகிறார்கள்.
பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனிலும் தகிடுதத்தம் போடுகிறது. 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னை, கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் 'சரண்' அடைந்து விட்டது.
ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்துள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 316 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெங்களூரு அணியில் தடுமாறுகிறார்கள். குறிப்பாக மேக்ஸ்வெல் (5 ஆட்டத்தில் 32 ரன்), கேமரூன் கிரீன் (68 ரன்), கேப்டன் பிளிஸ்சிஸ் (109 ரன்), ரஜத் படிதார் (50 ரன்) ஆகியோரின் தொப்பல் தான் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இன்னும் களம் காணும் சரியான லெவன் அணி அமையவில்லை. கோலியுடன் இதர பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று மட்டையை சுழற்றினால் தான் மும்பையை அடக்க முடியும். இதை உணர்ந்து செயல்பட்டு அவர்கள் தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் பெங்களூருவும், 18-ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளன.
- ஐபிஎல் புள்ளி பட்டியலில் கொல்கத்தா 2ம் இடத்தில் உள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு அணி 4 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது.
நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிக்கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளது.
- ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
- ஒரு சிக்சர் அடித்தால் 6 வீடுகளுக்கு சோலார் மின்சார வசதி வழங்கப்படும் என ஆர்ஆர் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடத்தையும் டெல்லி, மும்பை அணிகள் கடைசி இரண்டு இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில் நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு அறிவிப்பை ராஜஸ்தான் அணி அறிவித்தது.
அதன்படி இந்த போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய தகட்டின் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.
- ஆர்.சி.பி அணி அழுத்தத்தில் இருக்கும்போது அந்த அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது.
- அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள்.
ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டியில் லக்னோ - பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆர்.சி.பி அணி அழுத்தத்தில் இருக்கும்போது அந்த அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது. அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள். அணியில் உள்ள பெரிய வீரர்கள் எல்லோரும் மேலே ஆட்டம் தொடங்கும் முன்னரே அவுட்டாகி சென்று விடுகிறார்கள்.
இப்படியிருந்தால் அந்த அணி வெற்றி பெறாது. அதுமட்டுமின்றி ஆர்.சி.பி அணிக்குக் கடைசி கட்டம்வரை அழுத்தத்தில் விளையாடக் கூடிய வீரர்களாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், இளம் வீரரான அனுஜ் ராவத் பிறகு தினேஷ் கார்த்திக். ஆனால் அந்த அணியில் இருக்கும் பெரிய பேட்ஸ்மேன்கள்தான் இந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் எல்லோரும் ஆட்டம் இழந்து டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தார்கள். இது இன்று மட்டும் நடக்கவில்லை. பதினாறு ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியின் கதை இதுதான்.
இவ்வாறு ராயுடு கூறினார்.
- பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
- இதன்மூலம் உள்ளூர் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பெங்களூரு:
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்றது. இதன்மூலம் உள்ளூர் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கொல்கத்தா 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு அணி 2-வது தோல்வியை தழுவியது.
பெங்களூரு அணி தொடக்க வீரரும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான விராட் கோலி நேற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன் எடுத்தார். பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் அரை சதம் எடுத்திருந்தார். சென்னைக்கு எதிராக மட்டுமே 21 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்தன் மூலம் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் டோனியை முந்தினார்.
விராட் கோலி 232 இன்னிங்சில் 241 சிக்சர்கள் அடித்துள்ளார். டோனி 218 இன்னிங்சில் 239 சிக்சர்கள் அடித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், ரோகித் சர்மா 261 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி, டோனி 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர்.
- டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- பெங்களூரு அணியின் விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஆர்.சி.பி. அணி முதலில் பேட்டிங் செய்தது. டூ பிளசிஸ் 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆட, அணியின் ரன் வேகமும் அதிகரித்தது.
2வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில், கேமரூன் 33 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார்.
- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. அடுத்து உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த ஆட்டத்தில் 177 ரன் இலக்கை பெங்களூரு அணி எட்டுவதற்கு விராட் கோலியின் அசத்தலான அரைசதம் அடித்தளமாக அமைந்தது என்றால், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் ஆகியோரின் அதிரடி வெற்றிக்கு வித்திட்டது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேமரூன் கிரீன், ரஜத் படிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் ஜொலித்தால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் முகமது சிராஜ், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப், ஆல்-ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது. கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவையாக இருந்த நிலையில் அந்த ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பேட்டிங்கில் பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல் , ரிங்கு சிங், பந்து வீச்சில் சுனில் நரின், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் 2-வது வெற்றியை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. 2-வது வெற்றியை பெறப்போகும் அணி எது? என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்