search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேற்றுகிரகவாசிகள்"

    • ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை.

    ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

    இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல்கள் வெளியாகின.

    ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கான ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:-

    பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா?

    ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஒரு சிறிய அணி அல்ல. சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தது. இன்னும் முதல் மூன்று அணிகளில் ஒன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×