என் மலர்
நீங்கள் தேடியது "நகை கடன்"
- 10 சதவீத பணம் ஏடிஎம் எந்திரம் மூலமும், மீதி பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.
- வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள கோதவாடாவில் இந்திய மத்திய வங்கி சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக தங்க நகை கடன் வழங்கும் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஏ.டி.எம். எந்திரத்தை தலைமை நிர்வாக அதிகாரி எம்.விராவ் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட முதல் தங்க நகை கடன் ஏ.டி.எம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே சோதனை அடிப்படையில் முதன்முறையாக ஆதார் அட்டை செல்போன் எண் பயன்படுத்தி தங்க நகை கடனை இதில் பெற முடியும்.
ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களது நகைகளை வைத்தால் ஏஐ தொழில்நுட்பத்துடன் தங்கத்தின் தரம் மற்றும் எடை அளவுகள் அன்றைய சந்தையின் விலைக்கு ஏற்ப பணம் தர முடியும். 10 சதவீத பணம் ஏடிஎம் எந்திரம் மூலமும், மீதி பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.
இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டுமே இந்த சேவையை பெற முடியும். இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த சோதனை வெற்றி அடைந்தால் நாட்டின் பிற பகுதிகளிலும் நகை கடன் ஏ.டி.எம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- வட்டிக்கடை கடைக்காரர் கூட வாடிக்கையாளர்களை கவர இலவசங்களை அறிவித்துள்ளார்.
- கும்மிடிப்பூண்டியில் இந்த அறிவிப்பு பலகையை பார்த்து கடனாளி ஆக்குவதற்கும், இலவசம் வந்து விட்டது என்று வேடிக்கையாக பேசிக்கொள்கிறார்கள்.
சென்னை:
வியாபாரத்தை பெருக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி, இவ்வளவு ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் இந்த பொருள் இலவசம். தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம். இப்படி வாடிக்கையாளர்களை கவர விதவிதமான அறிவிப்புகளை பார்த்திருப்போம்.
இப்போது வட்டிக்கடை கடைக்காரர் கூட வாடிக்கையாளர்களை கவர இலவசங்களை அறிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் தனியார் அடகு கடை ஒன்றியம் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நகை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்.
ரூ.30 ஆயிரம் வரை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணையுடன் அரை லிட்டர் பெட்ரோலும் இலவசம், ரூ.40 ஆயிரம் வரை அடகு வைத்தால் கூடுதலாக 5 கிராம் வெள்ளியாம். ரூ.40 ஆயிரத்துக்கு மேல் அடகு வைத்தால் தலா ஒரு லிட்டர் பெட்ரோல், சமையல் எண்ணையுடன் 10 கிராம் வெள்ளி நகையாம்.
கும்மிடிப்பூண்டியில் இந்த அறிவிப்பு பலகையை பார்த்து கடனாளி ஆக்குவதற்கும், இலவசம் வந்து விட்டது என்று வேடிக்கையாக பேசிக்கொள்கிறார்கள்.