என் மலர்
நீங்கள் தேடியது "ஒடிசா சட்டசபை"
- கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- பிஜு ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா சட்டசபை இன்று கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதன்பின், சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்கள் மாநில அரசிடம் உத்தரவாதம் கோரினர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரண் தாஸ், சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
- ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
- அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை என்றார்.
புவனேஸ்வர்:
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார்.
மேலும், என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஒடிசா சட்டசபை சபாநாயகராக இருந்துவரும் பைக்ரன் கேசரிஆருக்கா மற்றும் ஸ்ரீகாந்தா சாகு, சமீர் ரஞ்சன் தாஸ் ஆகிய இரு மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளார்.
- ஒடிசா சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக பாஜக வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
- இதன் மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலோடு ஒடிசா சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதில், பெரும்பான்மையை பிடித்து ஒடிசா சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
தனித்து தேர்தலில் களம் கண்ட பாஜக 147 இடங்களில் 78 இடங்கள் வென்று தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், ஒடிசா சட்டசபைக்கு வரலாற்றில் முதன் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ளார்.
ஒடிசாவின் பாராபதி கட்டாக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சோபியா பிர்தவுஸ் அறிவிக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பூர்ண சந்திர மகாபத்ராவை விட 8,001 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சோபியா பிர்தவுஸ் கலிங்கா இன்ஸ்டிடியூட்டில் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி படிப்பை முடித்து பெங்களூருவில் ஐ.ஐ.எம் படிப்பையும் முடித்துள்ளார்.
32 வயது இளம் எம்.எல்.ஏ.வான சோபியா பிர்தவுஸ் இன் தந்தை ஒடிசா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகமது மொகிம் ஆவார். முகமது மொகிம் சட்டமனற உறுப்பினராக இருந்த தொகுதியில் அவரது மகள் இப்போது வெற்றி பெற்றுள்ளார்.
- ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 857 யானைகள் உயிரிழந்துள்ளன.
- இதில் மின்சாரம் தாக்கி மட்டும் 149 யானைகள் பலியாகி உள்ளன என்றார் வனத்துறை மந்திரி.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநில சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை மந்திரி கணேஷ் ராம் சிங்குந்தியா பேசியதாவது:
ஒடிசா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 857 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகளின் இயற்கைக்கு மாறான மரணத்திற்கு மின்சாரம் தாக்குதலே முக்கியக் காரணம். நோய்கள், விபத்துக்கள், வேட்டையாடுதல் ஆகிய காரணங்களுக்காகவும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
2014-15 மற்றும் 2024-25 (டிசம்பர் 2 வரை) 149 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.
வேட்டைக்காரர்கள் 30 யானைகளைக் கொன்றனர்.
நோய்களாலும் அதிக எண்ணிக்கையாக 305 யானைகள் உயிரிழந்தன.
இயற்கை மரணங்களாக 229 யானைகள் இறந்திருக்கின்றன.
ரெயிலில் அடிபட்டு 29 யானைகள் உயிரிழந்தன.
யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையினால் 16 யானைகள் இறந்தன.
90 யானைகள் இறந்ததன் பின்னணியை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் கண்டறிய முடியவில்லை.
சமீபத்தில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி ஒடிசாவின் வெவ்வேறு காடுகளில் 2,103 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.