என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பியூஷ் சாவ்லா"
- முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
- இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சாஹல் படைத்துள்ளார். அவர் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை விட்டு கொடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா - 222, ஜடேஜா - 206, அஷ்வின் - 203, அமித் மிஷ்ரா - 183 ஆகியோர் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிராவோ ஐபிஎல் கிரிக்கெட்டில் 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- சாவ்லா 184 விக்கெட்டுகள் வீழ்த்தி பிராவோவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 169 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை 9 ரன்னில் ஆவுட்டாக்கினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பிராவோவை 3-வது இடத்திற்கு தள்ளி, 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பிராவோ 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை அவுட்டாக்கியதன் மூலம் 184 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
சாஹல் 200 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் 178 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் உள்ளார்.
- நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன்.
- நான் இந்திய அணிக்காக ஆடிய போது, என் மகன் குழந்தையாக இருந்தார்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டியில் குஜராத்- மும்பை அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது. 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
நடப்பு சீசன் முழுவதும் மும்பை அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களாக பியூஷ் சாவ்லா இருந்து வருகிறார். மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த சீசனில் வர்ணனை செய்து கொண்டிருந்த பியூஷ் சாவ்லா, நடப்பு சீசனில் களமிறங்கி மிரட்டலாக விளையாடி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன் என பியூஷ் சாவ்லா கூறியுள்ளார்.
இது குறித்து பியூஷ் சாவ்லா கூறியதாவது:-
நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன். ஏனென்றால் நான் இந்திய அணிக்காக ஆடிய போது, என் மகன் குழந்தையாக இருந்தார். கிரிக்கெட்டை அவரால் அந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல. கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. என் ஆட்டத்தை தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்க்கிறான்.
ஒவ்வொரு ஆட்டம் முடிவடைந்த பின்னரும், என்னுடைய பந்துவீச்சை இருவரும் சேர்ந்து ரிவ்யூ செய்து வருகிறோம்.
என்று அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்