search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்படை வீரர்"

    • கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.
    • சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பதி:

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் நேற்று முதல் முறையாக கடற்படை வீரர்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று மாலை 4 மணி அளவில் சூரியன் மறையும் பின்னணியில் கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.

    சாகச நிகழ்ச்சியை கடற்கரை வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வீட்டின் மாடி மற்றும் பால்கனிகளில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் தாழ்வாக பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ஏரோ பாட்டிக்ஸ் கமாண்டோ படை வீரர்கள் விமானத்தில் பறந்து வந்து ஸ்கை டைவிங் செய்தபடி விமானத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் கடற்கரை மணலில் இறங்கினர். இந்த சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    மேலும் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் கடற்கரை சாலையை நெருங்கி வந்து தீப்பிழம்பை கொட்டியது.

    கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

    மீண்டும் டிசம்பர் 2-ந்தேதி மற்றும் இறுதி சாகச நிகழ்ச்சி டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார்.
    • முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கின்சாகா:

    காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருள்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.
    • கப்பல் நிற்காமல் செல்லவே சினிமா பாணியில் அதனை கடற்படையினர் துரத்தி சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்காக ஆபரேசன் சமுத்திரகுப்தா என்ற பெயரில் உளவு துறை, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    இவர்களின் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருள்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சமீபத்தில் நடந்த வேட்டை சினிமா பாணியில் நடந்தது. அதாவது கடற்படையும், உளவு துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கடத்தல் காரர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில் போதை பொருளுடன் சென்ற கப்பலை அடையாளம் கண்டு துரத்தினர். அந்த கப்பல் நிற்காமல் செல்லவே சினிமா பாணியில் அதனை கடற்படையினர் துரத்தி சென்றனர்.

    இதில் கடற்படையிடம் சிக்கிய கப்பலில் சுமார் 134 மூடைகளில் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடியாகும். அதனை பறிமுதல் செய்த கடற்படையினர், போதை பொருள் கடத்தல் தடுப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இந்த போதை பொருள் இந்தியாவுக்குள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை விசாரித்து வருகிறார்கள்.

    கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு குழுவினர் இணைந்து உளவு துறையினர் அளித்த தகவலின் பேரில் நடத்திய ஆபரேசன் சமுத்திரகுப்தா வேட்டையில் மட்டும் இதுவரை சுமார் ரூ. 25 ஆயிரம் கோடிக்கு போதை பொருள் சிக்கியிருக்கும் என கூறப்படுகிறது.

    ×