என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "தருமபுரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்"
- விபத்துக்களால் பெரிய அளவிலான பலத்த காயங்கள், உடல் உறுப்பு இழப்பு மற்றும் உயிரிழப்பு களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
- அதிக எண்ணிக்கை யிலான சாலை போக்குவரத்து விபத்துக்கள் இங்கு ஏற்படுகின்றன.
தருமபுரி,
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI), திட்ட இயக்குநரை தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஷ்வரன் சேலத்தில் நேரில் சந்திந்து பெங்களூரு – கன்னியாகுமரி நெடுஞ்சாலை 161.0 கி.மீ முதல் 161.4 கி.மீ வரையிலான தொப்பூர் மலைப்பகுதி வளைவு சாலையை மறுவடிவமைப்பு செய்து பயணத்திற்கு பாதுகாப்பான புதிய சாலையாக மாற்றி வடிவமைத்து விபத்துக்களை தடுக்க கோரிக்கை கடிதம் அளித்து வலியுறுத்தினார்.
தேசிய நெடுஞ்சாலை களில், பெங்களூரு – -கன்னியாகுமரி நெடுஞ்சாலை மிகவும் பரப்பரப்பான சாலைகளில் ஒன்றாகும்.
இச்சாலை 2010 ஆம் ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற் காக திறக்கப்பட்டது. பெங்களூரு – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 161.0 கி.மீ முதல் 161.4 கி.மீ வரை யிலான தொப்பூர் மலைப்பகுதி சாலை கடுமை யான வளைவு மிகுந்த சாலையாகும்.
சாலையில் அடிக்கடி அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த வளைவுச் சாலை பகுதி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு மரண பொறியாக அமைந்துள்ளது.
அதிக எண்ணிக்கை யிலான சாலை போக்குவரத்து விபத்துக்கள் இங்கு ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக விபத்துக்கள் குறைந்தபாடு இல்லை.
விபத்துக்களால் பெரிய அளவிலான பலத்த காயங்கள், உடல் உறுப்பு இழப்பு மற்றும் உயிரிழப்பு களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
விபத்துக்கள் ஏற்பாட்டால் பல கி.மீ வாகனங்கள் அணிவகுத்து சாலையில் நிற்கின்றன. துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விபத்துக்கள் குறைய வில்லை.
நெடுஞ்சாலைகளில் மற்ற பகுதிகளை விட ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. இப்பகுதில் மோசமாக அமைக்கப்பட்ட சாலையை ஆராய்ந்து சாலையில் விபத்துக்களை குறைக்க, சாலையை மறுவடிவமைப்பு செய்து பயணத்திற்கு பாதுகாப்பான வகையில் செயல்படுத்த திட்ட மதிப்பீடு ரூ.435 கோடியில் தயாரிக்கப்பட்ட புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதில், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பாமக மாவட்ட பொறுப்பாளர் பால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.