search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இராவணன்"

    • போராட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடக்கிறது.
    • காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் காரசாரமாக மோதிக் கொள்வது வாடிக்கையானதுதான்.

    அந்த வகையில் 5 மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவும், காங்கிரசும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை போஸ்டராக வெளியிட்டு அதில் 'மிகப்பெரிய பொய்யர்' என குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜூம்லா பாய் என்றும் விரைவில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பார்க்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு பதிலடியாக பா.ஜனதா சார்பில் ராகுல் படத்தை 10 தலைகளுடன் வெளியிட்டு ராவணன் என்று குறிப்பிட்டனர். இந்த இரு படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக பா.ஜனதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த காங்கிரஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டது. உடனடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    சென்னையில் தி.நகரில் பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடக்கிறது.

    காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இராமநாதசுவாமி கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
    • இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

    இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

    தல வரலாறு

    இராமன் சீதையை மீட்க இராவணனிடம் போர் புரிந்து கொன்றான்.இராவணனை கொன்ற பாவத்தினை நீக்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே இராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு இராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.

    கோவில் அமைப்பு

    தென்னிந்திய கோவில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3,850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.

    திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம்:

    வ.எண் தீர்த்தங்கள் விபரம்

    1 மகாலட்சுமி தீர்த்தம்

    2 சாவித்திரி தீர்த்தம்

    3 காயத்திரி தீர்த்தம்

    4 சரஸ்வதி தீர்த்தம்

    5 சங்கு தீர்த்தம்

    6 சக்கர தீர்த்தம்

    7 சேது மாதவர் தீர்த்தம்

    8 நள தீர்த்தம்

    9 நீல தீர்த்தம்

    10 கவய தீர்த்தம்

    11 கவாட்ச தீர்த்தம்

    12 கெந்தமாதன தீர்த்தம்

    13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்

    14 கங்கா தீர்த்தம்

    15 யமுனா தீர்த்தம்

    16 கயா தீர்த்தம்

    17 சர்வ தீர்த்தம்

    18 சிவ தீர்த்தம்

    19 சாத்யாமமிர்த தீர்த்தம்

    20 சூரிய தீர்த்தம்

    21 சந்திர தீர்த்தம்

    22 கோடி தீர்த்தம்

    • பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோவில்கள் உள்ளன.
    • தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப்பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.

    வைத்தியநாதர் கோவில், தேவ்கர் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம். புனிதமான தலமாகக் கருதப்படும் இவ்விடத்துக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விடம் பாபா தாம் அல்லது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

    இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோவில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப்பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.

    ×