search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்த 1 டன் மீன்கள்"

    • அதிகளவு கழிவுநீர் கலந்து வருவதால் வெயில் காலங்களில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி வருகிறது.
    • கண்மாயை சுற்றிலும் மீன்கள் கரை ஒதுங்கி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கொட்டகுடி ஆறு, ராஜ வாய்க்கால் மூலம் இந்த குளத்திற்கு நீர் நிரப்பப்படு கிறது. இந்த குளத்திற்கு வரும் ராஜ வாய்க்காலில் போடி பகுதியில் உள்ள கழிவு நீர் கலந்து கண்மாய்க்கு வருவதால் இந்த நீரானது மாசடைந்து குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையிலும் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அதிகளவு கழிவுநீர் கலந்து வருவதால் வெயில் காலங்களில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி வருகிறது.

    இறந்து கரை ஒதுங்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி தண்ணீர் மேலும் மாச டைந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. கண்மாயை சுற்றிலும் மீன்கள் கரை ஒதுங்கி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி வனப் பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த சுத்தமான நீரானது கழிவு நீராகவே இந்த கண்மாய்க்கு வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், தற்போது மீன்கள் செத்து விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும் மாசடைந்த நீர் நிலையை சுத்திகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×