என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏஆர்டி ஜூவல்லர்ஸ்"
- ஏராளமனோரிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
- 50-க்கும் மேற்பட்டோர் திடீரென பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போரூர்:
சென்னை முகப்பேர் பகுதியில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நகைக்கடை மற்றும் ஏ.ஆர்.டி. டிரஸ்டட் பிராப்பிட் உள்ளிட்ட பெயர்களில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இதனை சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.
இவர்கள் கவர்ச்சி கரமான பரிசு பொருட்களுடன் கூடிய தீபாவளி சீட்டு, நகைச்சீட்டு, ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.1½ லட்சத்துக்கு நகை வாங்கி கொள்ளலாம், முதலீடு செய்யும் தொகைக்கு வாரம் தோறும் 3 சதவீதம் வட்டி, ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 12 மாதத்தில் ரூ.2.40 லட்சத்துக்கு நகை வாங்கிக் கொள்ளலாம், வட்டியில்லாத நகைக்கடன், குலுக்கல் சீட்டு உள்ளிட்ட கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதை நம்பிய பொது மக்கள் பலர் தங்களது பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் பேசி பணத்தை முதலீடு செய்ய வைத்தால் அவர்களுக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளனர்.
இதனால் அங்கு நகைக்கடை மற்றும் நிறுவனங்களில் வேலைபார்த்த ஊழியர்களும் ஏராளமானோரை பணத்தை முதலீடு செய்ய வைத்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நகைக்கடை மற்றும் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை முதலீடாக பெற்றது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் திடீரென ஏ.ஆர்.டி. நகைக்கடை மற்றும் நிறுவனத்தை மூடிவிட்டு சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் தலைமைறைவாகி விட்டனர்.
இதுகுறித்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைக்கடை தொடங்கிய 2 ஆண்டுகளில் சகோதரர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்கள் மீது இதுவரை 925 பேர் மோசடி புகார் அளித்து உள்ளனர். மேலும் தினமும் 5 பேர் வரை ஏ.ஆர்.டி.நகைக்கடை மற்றும் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து இழந்ததாக புகார் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்து இழந்து இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இது வரை ரூ.13 கோடி மட்டும் மோசடி நடந்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் மேலும் பல கோடி மோசடி நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, 'இதுவரை ஏ.ஆர்.டி. நிறுவன உரிமையாளர்கள் மீது 925 புகார்கள் வந்துள்ளன. மேலும் தினசரி 5 பேர் வரை தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை ரூ.13 கோடி மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.
தலைமறைவான மோசடி சகோதரர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் ஏராளமனோரிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
இதற்கிடையே பணத்தை பறிகொடுத்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் ஏ.ஆர்.டி.நகைக்கடை, அதன் உரிமையாளர்கள் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்