என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளச்சந்தை"
- சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. - கே.கே.ஆர். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.
- 3 பேரிடம் இருந்தும் 11 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. - கே.கே.ஆர். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் 11 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குறைந்த பட்ச டிக்கெட்டான ரூ. 1700 டிக்கெட்டுகள் ரு.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
- ரூ.7,500 டிக்கெட்டுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வருகிற 28-ந் தேதி மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்ததாக தகவல் வெளியானது.
இதனால் டிக்கெட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் வேதனையடைந்தனர். மும்பை- சென்னை அணிகளுக்கான ஆட்டத்திற்கும் இதேபோல் தான் உடனே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றால் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வாங்குவது கடினமாக உள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நிர்வாகம் கொடுக்கும் இணையதளத்தின் உள்ளே சென்றாலே 3 லட்சம் பேர் காத்திருப்பதாக மெசெஜ் வருகிறது. காத்திருந்தால் கூட டிக்கெட் பெற இயலவில்லை எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சென்னை போட்டிகளின் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் லட்ச கணக்கில் விற்பனை செய்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. குறைந்த பட்ச டிக்கெட்டான ரூ. 1700 டிக்கெட்டுகள் ரு.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ரூ.7,500 டிக்கெட்டுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்தும் வாங்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
போட்டிக்கான டிக்கெட் வாங்கியவர்கள் எக்ஸ் தளம் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களில் தன்னிடம் டிக்கெட் இருப்பதாகவும் அதனை பெற்றுக் கொள்ள தனது நம்பருக்கு கால் செய்யுங்கள் அல்லது மெசெஜ் செய்யுங்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

உடனே டிக்கெட்டுக்காக அதனையும் ரசிகர்கள் யோசிக்காமல் செய்கிறனர். இதனால் பெரிய அளவில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். டிக்கெட் இல்லாமலே தன்னிடம் டிக்கெட் இருப்பதாக கூறி ஏமாற்று வேலையிலும் சிலர் ஈடுபடுகின்றனர். டிக்கெட் வேண்டும் என்ற ஆசையில் முதலில் கேட்டவுடன் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி விடுகின்றனர். பின்னர் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் போன் அனைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.
மேலும் பலர் ஒரு டிக்கெட்டை பல பேருக்கு அனுப்பி வைத்து விட்டு அனைவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கடைசியில் டிக்கெட்டை கொடுக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் உஷாரக இருக்க வேண்டும்.
இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு பொது வினியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது வினியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.
அதனைத்தொடர்ந்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்துப் பணி மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன்படி தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 3 லட்சத்து 29 ஆயிரத்து 300 கிலோ அரிசி, 152 எரிவாயு சிலிண்டர்கள், 90 கிலோ கோதுமை, 250 கிலோ துவரம்பருப்பு, 251 லிட்டர் மண்எண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 61 ஆயிரத்து 969 ஆகும். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட 529 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதுதவிர கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 18005995950 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
- கள்ளச்சந்தையில் விற்பனைக்காக கடத்த முயன்ற ரூ.61 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 4111 குவிண்டால் அரிசி, 747 கிலோ கோதுமை பிடிபட்டன
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 158 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
சென்னை:
கடந்த செப்டம்பர் மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பனைக்காக கடத்த முயன்ற ரூ.61 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 4111 குவிண்டால் அரிசி, 151 சிலிண்டர், 747 கிலோ கோதுமை, 186 கிலோ துவரம்பருப்பு, 1481 லிட்டர் மண் எண்ணெய், 37 கிலோ சர்க்கரை ஆகியவை பிடிபட்டன.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 158 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. 748 பேர் கைது செய்யப்பட்டனர் என்று உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளர் தெரிவித்து உள்ளார்.