என் மலர்
நீங்கள் தேடியது "கட்டட கழிவு"
- பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது.
- குட்டைக்கு மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.
பல்லடம் :
பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டைக்கு மழைக்காலங்களில் கோவை- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.
இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவு நீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் நீரோடை கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், கட்டடக்கழிவுகள் மற்றும் கழிவுகளை போட்டு குட்டையை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.