என் மலர்
நீங்கள் தேடியது "குல்பி"
- குல்பி ஐஸ்கிரீம் சுகாதாரமற்ற முறையில் தரமற்ற நிலையில் தயாரிக்கப்படுவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன.
- மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குல்பி ஐஸ்கிரீம் கடைக்கு சென்று சோதனை செய்தனர்.
தரங்கம்பாடி:
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேன்.
இவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு தெருவில் கடை வைத்து குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இங்கு தயாரிக்கப்படும் குல்பி ஐஸ்கிரீம் சுகாதாரமற்ற முறையில் தரமற்ற நிலையில் தயாரிக்கப்படுவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து இன்று காலை மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குல்பி ஐஸ்கிரீம் கடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் ஐஸ்கிரீமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேனிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் , மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.