என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதம் அடித்த கத்தரி வெயில்"

    • வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில் மழை.
    • வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    வேலூரில் 105.1 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, திருத்தணியில் 102 டிகிரி, சென்னையில் 101 டிகிரி, கரூர், மதுரை, தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்துள்ளது.

    வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    வேலூர் மாநகரில் சத்துவாச்சாரி, வள்ளலார், காட்பாடி, திருவலம், கொணவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. 

    • வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் பகல் இரவு நேரங்களில் கடுமையான வெப்பமும் அனல் காற்று வீசி வந்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக 97 முதல் 98 டிகிரி பாரண்ட்ஹீட் வரை வெயிலின் அளவு நீடித்து வந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக 100.4 F ( 38 டிகிரி செல்சியஸ்) குறைந்த பட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது.

    கடுமையான வெயிலின் தாக்கத்தால் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது. வரும் 29ஆம் தேதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரவு நேரங்களில் அனல் காற்று வீசுவதால் வேர்வை புழக்கத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    ×