search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழக்கவழக்கங்கள்"

    • டோபமைன் நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
    • நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது.

    டோபமைன் என்பது மூளையில் உற்பத்தியாகும் ஒரு ரசாயனம். இது நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உடல் இயக்கம், நினைவாற்றல், மகிழ்ச்சிகரமான மனநிலை, ஊக்கம், நடத்தை, அறிவாற்றல், தூக்கம், உற்சாகம் மற்றும் கற்றல் ஆகிய மனநிலைகளுக்கு உதவுகிறது.

    ஒருவருக்கு டோபமைன் அளவு குறைவாக இருந்தால் அவர் சோர்வாக, ஊக்கமில்லாத மனதுடன், மகிழ்ச்சியற்றவராக, மனம் உறுதியான முடிவெடுக்கும் தன்மை இல்லாதவராக இருப்பார். தூக்கமின்மை பிரச்சனைகளும் இருக்கும்.

    உடலில் இயற்கையாக டோபமைனை அதிகரிக்கும் உணவு முறைகள்:

    1) டோபமைனை உருவாக்க நமது உடலுக்கு டைரோசின் என்கிற அமிலோ அமிலம் தேவைப்படுகிறது. அது பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, தானியங்கள், பால், பீன்ஸ், சோயா போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் காபின் அதிகம் உள்ள காபி மற்றும் சாக்லேட் போன்றவை டோபமைன் சுரப்பை அதிகரிக்கும்.

    பாதாம், வால்நட், ஆப்பிள், வெண்ணெய், அவகோடா, வாழைப்பழம், சாக்லேட், பச்சை இலைக் காய்கறிகள், பச்சை தேயிலை, பீன்ஸ், ஓட்ஸ், ஆரஞ்சு, பட்டாணி, எள் மற்றும் பூசணி விதைகள், தக்காளி, மஞ்சள், தர்பூசணி மற்றும் கோதுமை ஆகியவை டோபமைனை அதிகரிக்கும் உணவுகள் ஆகும்.

    2) ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக உழைத்து அதில் வெற்றி காணும்போது நமது உடல் அதிக டோபமைனை வெளியிடுகிறது. புதிய விஷயங்களை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும் போதும் டோபமைன் அதிகரிக்கிறது.

    3) மிதமான சூரிய ஒளியில் 20 நிமிடம் தினமும் செலவிடும்போது டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது.

    4) ஆழ்ந்த சுவாசம், பிரணாயாமம், மூச்சுப் பயிற்சி இவை டோபமைன் அளவை அதிகரிக்கும். மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் வைத்து, பின்பு அதை வெளியே விடவும். உடனடியாக டோபமைன் அளவு அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

    5) தியானம், உடற்பயிற்சி, யோகா, மசாஜ், நடப்பது, புத்தகம் படிப்பது போன்றவை டோபமைன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

    6) சக மனிதர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது. எனவே, சிறிய அளவு நன்மை கிடைத்தாலும் அதற்காக நன்றி சொல்வது உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

    சித்த மருத்துவம்:

    1) நெல்லிக்காய் லேகியம்: காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அசுவகந்தா லேகியம்: காலை, இரவு ஐந்து கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்

    3) பிரம்மி மாத்திரை: காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    4) வல்லாரை மாத்திரை: காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    • மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம்.
    • ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.

    இன்றைய வாழ்க்கைச்சூழலில் மன அழுத்தம் தவிர்க்கமுடியாத விஷயமாக இருக்கிறது. அதனை திறம்பட நிர்வகிப்பது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்தும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைத்து மனதுக்கு மறுமலர்ச்சியை பெற்றுத்தரும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இவை..

    * மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம். இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். முடியாதபட்சத்தில் சுவாசத்தில் கவனம் செலுத்தி ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிட சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும்.

    * மன அழுத்தத்தை நிர்வகிக்க அன்பானவர்களின் ஆதரவு முக்கியமானது. வலுவான சமூக தொடர்பு கொண்டவர்களுக்கு மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும். நேரில் சந்திப்பது, செல்போனில் பேசுவது, வீடியோவில் அரட்டை அடிப்பது என ஏதாவதொரு வகையில் உங்களுக்கு உண்மையாக இருப்பவர்களுடன் சில நிமிடங்களை செலவிடுவதும், உங்கள் மனதில் இருக்கும் பாரங்களை இறக்கி வைப்பதும் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும். மனதுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொடுக்கும். எனவே நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.

    * லாவெண்டர், சாமந்தி, சந்தனம் போன்ற வாசனைகள் அமைதியுடன் தொடர்புடையவை. இந்த எண்ணெய்களை சருமத்தில் தடவலாம். குளிக்கும் நீரில் சில துளிகள் சேர்க்கலாம்.

    * ஓவியம் தீட்டுவது, இசைக்கருவியை வாசிப்பது போன்ற செயல்பாடுகள் மன அழுத்தத்தை குறைக்கும். தினமும் இதற்கு முடியாத பட்சத்தில் வாரந்தோறும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

    * ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும். இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். 4-7-8 சுவாச பயிற்சியை முயற்சிக்கவும். அதாவது 4 விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கவும், 7 விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும், பின்பு 8 விநாடிகள் சுவாசத்தை வெளியேற்றவும்.

    * சிரிப்பு யோகா செய்வதும் பலன் தரும். ஆக்சிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கச்செய்து எண்டோர்பின்களை வெளியிடும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    * செல்லப்பிராணிகளை வளர்ப்பது, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது, அதனுடன் நேரம் செலவிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். தனிமை உணர்வையும் குறைக்கும். மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

    * டிஜிட்டல் திரைகள் மற்றும் சமூக ஊடகங்களை தொடர்ந்து பார்வையிடுவது மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வித்திடும். அதனை ஒதுக்கிவைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். அது மனதை இதமாக்கும். மறுமலர்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும்.

    * தோட்டக்கலையில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தை குறைக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செடிகளை நடுவது, வளர்ப்பது, அறுவடை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவது, தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மையை பெற்றுத்தரும். தினசரி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் இணைய வைக்கும்.

    • சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.
    • மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    வாழ்க்கை எனும் அழகான பயணத்தில் பொருளாதாரம், குடும்பம் அல்லது சூழ்நிலையின் காரணமாக நாம் விரும்பிய செயலையோ அல்லது வேலையையோ செய்ய முடியாமல் போகலாம். பலர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனக்கு பிடித்த, இயல்பாக வரக்கூடிய வேலையை செய்யாமல், வேறு வேலையை முழுமனம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

    பல வருடங்கள் கழித்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், நமக்கு பிடித்ததை செய்யவில்லையே, வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே என்ற கவலை ஏற்படும்.

    ஒருசில நேரங்களில் பொருளாதாரம் அல்லது சூழ்நிலைக்காக சில விஷயங்களை செய்யாமல் இருப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ நல்லதுதான், ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்தால், ஒரு கட்டத்தில் 'ஏன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம்? யாருக்காக வாழ்ந்தோம்? என்ற கேள்வி தோன்ற ஆரம்பிக்கும்.

    வாழ்க்கையை உங்களுக்காக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் செய்கிற வேலையை செய்தால், நாமும் அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய மகிழ்ச்சியை வேறு யாராலும் வரையறுக்க முடியாது.

    எது உங்களுக்கு திருப்தியானது அல்லது நிறைவானது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை உங்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எந்த வேலை பிடித்து இருக்கிறதோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து முழுமையாக மன நிம்மதியுடன் செய்யுங்கள்.

    மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    எப்போதாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடாது. நீங்கள் எப்படி இருந்தாலும், எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், உங்களை நீங்களே பாராட்டுங்கள்! ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்.

    பெண்களே உங்களுக்கு இருக்கும் தனித்துவத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அவ்வப்போது பிடித்தவற்றை வாங்குங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். பிடித்த உணவை பிடித்த இடத்தில் சாப்பிடுங்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.

    நீங்கள் இதுவரை பிடிக்காத வேலையை செய்து கொண்டிருந்தால், இனி உங்களுக்கு பிடித்தவாறு அதை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த செயலில் உங்களை ஈடுபடுத்துங்கள். புதிய வேலையை செய்யத் தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள்.

    'வயதாகி விட்டது, இனி நாம் என்ன செய்து என்ன நடக்கப் போகிறது?' என்று எண்ணாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை பற்றி யோசிப்பதை விடுத்து, இனி உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வாழலாம் என்று யோசியுங்கள்.

    ×