என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பப்ஜி கேம்"
- இந்த கேமின் தாக்கங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாக மத்திய மந்திரி கூறினார்.
- ஆயுதங்களுடன் எதிரியை அழிக்க சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த ஆன்லைன் விளையாட்டு இது.
புதுடெல்லி:
தென் கொரியாவைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி கேம். இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது. எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது 2020ம் ஆண்டு பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.
அதன்பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிஜிஎம்ஐ (பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) என்ற பெயரில் கிராப்டன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுவும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஆப்பை மத்திய அரசு தடை செய்தது. கிராப்டன் நிறுவனம் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுமார் 10 மாதங்களாக இந்தியாவில் பிஜிஎம்ஐ விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிஜிஎம்ஐ கேமை கிராப்டன் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வர் இருப்பிடங்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு கேமிங் நிறுவனம் இணங்கிய பிறகு, மூன்று மாதத்திற்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். இந்த கேமுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன், அடுத்த 3 மாதங்களில் பயனருக்கு தீங்கு ஏதேனும் ஏற்படுகிறதா? பயனர்கள் அடிமையாகிறார்களா? என்பதுபோன்ற பிற விஷயங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு, ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுதான் பப்ஜி. இது முழுக்க முழுக்க துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக்கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ சேர்ந்தோ சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு. துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளின் நுண்ணிய தகவல்களை தெரிந்துவைத்துக்கொண்டு விளையாட வேண்டும். பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே, ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற விளையாட்டு தேவையில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்