என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்துறையினர் வரவேற்பு"

    • தவறான முறையில் சம்பாதித்து பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு.
    • ஆடைகள் வாங்குபவர்கள் ஆன்லைன் மூலமே பண பரிவர்த்தனை செய்கிறார்கள்.

    திருப்பூர் :

    2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்று உள்ளனர். இது குறித்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆடை உற்பத்தியாளர்களுக்குஎந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே ஆடை உற்பத்தி துறையினர் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை யாரும் பதுக்கி வைக்க வாய்ப்பில்லை. தவறான முறையில் சம்பாதித்து பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு. 2000 ரூபாய் நோட்டுகள் தடையால் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள்.எனவே 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை வரவேற்கிறோம் என்றார்.

    திருப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சந்திரசேகர் என்பவர் கூறுகையில், ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது பாடமாக இருக்கும். தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகின்றனர். 2000 ரூபாய் நோட்டு தடையால் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை நான் வரவேற்கிறேன் என்றார்.

    காதர்பேட்டை 2-ம் தரபனியன் வியாபாரிகள் சங்க துைண தலைவர் குமார் கூறுகையில், எங்களிடம் ஆடைகள் வாங்குபவர்கள் ஆன்லைன் மூலமே பண பரிவர்த்தனை செய்கிறார்கள். 10 சதவீதம்பேர்தான் பணம் செலுத்தி ஆடைகள் வாங்குகின்றனர். இதனால் 2000 ரூபாய் நோட்டு தடையால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றனர். 

    ×