search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறப்பு சதவீதம்"

    • இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் இறப்பு சதவீதம் ஆயிரம் பேருக்கு 3.97 சதவீதமாக இருந்தது.

    அதன்பின்பு இம்மாவட்டத்தில் இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட இறப்பு சதவீதத்தை காட்டிலும் அதன்பின்பு வந்த ஆண்டுகளில் இறப்பு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    அதாவது 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் முதியோர் இறப்பு 12 சதவீதமாகவும், பெண்கள் 11 சதவீதமாகவும், இதய நோய் உள்ளவர்கள் 10 சதவீதமாகவும் உள்ளனர்.

    இதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள பிறப்பு-இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தோம்.

    இந்த பதிவேடுகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 7931 ஆக பதிவாகி உள்ளது. இது 2022-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 8665 ஆக பதிவாகி உள்ளது.

    கொரோனா தொற்று குறைந்த நிலையில் அதற்கு பிந்தைய இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்ன? என்பது பற்றி விஞ்ஞானிகள் சோதனை நடத்த வேண்டும் என்று இந்த ஆய்வை நடத்திய குழுவினர் கூறியுள்ளனர்.

    கொரோனாவுக்கும், கொரோனாவுக்கு பிந்தைய சாவு எண்ணிக்கை உயர்வதற்கான காரணம் குறித்து இந்த ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×