என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணிப்பூர் மோதல்"
- ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்களுடன் செல்பி எடுத்துள்ளார் தலைமை காவலர்.
- தலைமைக் காவலரை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்ததால், மீண்டும் வேலை வழங்குமாறு போராட்டம்.
மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுடன் சேர்ந்த செல்பி எடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக சுரசந்த்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமைக் காவலர் மீது ஒழுங்கை நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இதற்கு ஆயுதம் ஏந்திய குழு மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
சுமார் 300 முதல் 400 பேர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கலைந்த செல்ல உத்தரவிட்ட நிலையில் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளனர்.
அப்போது போராட்டம் நடத்திய கும்பல் எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், கல்வீசி தாக்கல் நடத்தியுள்ளனர். போலீசார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
குகி-சோ பழங்குடியின மக்கள், பொலீசார் தங்கள் கிராமங்களை குறிவைத்து தாக்கி வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர. ஆனால், போலீசார் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும், "கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களை" ஊக்குவிப்பதில் குகி-சோ கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவதாக தெரித்துள்ளனர்.
- மெய்டேய் சமூகத்தினரை எஸ்டி பிரிவில் சேர்த்தால் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும்.
- ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கவுகாத்தி:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டேய் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 3ம் தேதியன்று குக்கி பழங்குடியின அமைப்பு சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டேய் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை பல்வேறு இடங்களுக்கும் பரவி 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் இம்பாலின் நியூ செக்கான் பகுதியில் மெய்டேய் மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இடம்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இந்த மோதல் உருவானது. மோதல் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம் இருந்ததால், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநில மக்கள்தொகையில் மெய்டேய் சமூகத்தினர் 64 சதவீதம் உள்ளனர். எனினும், மலைப் பகுதிகளில் பழங்குடியினர் அல்லாதவர்கள் நிலம் வாங்க அனுமதிக்கப்படாததால், மாநிலத்தின் 10 சதவீத நிலப்பகுதியிலேயே அவர்கள் வசிக்கின்றனர். அவர்களை எஸ்டி பிரிவில் சேர்த்தால் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும். எனவே, அவர்களின் இந்த கோரிக்கை பழங்குடியினரை ஆத்திரமடைய செய்துள்ளது.
பாஜக அரசாங்கம் தங்களை காடுகளிலிருந்தும் மலைகளில் உள்ள வீடுகளிலிருந்தும் அகற்றுவதை நோக்கமாக கொண்டு திட்டமிட்டு செயல்படுவதாக குக்கி சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். போதைப்பொருளுக்கு எதிரான போர் என்று கூறுவதும் தங்களை வெளியேற்றுவதற்கான ஒரு சூழ்ச்சி என்றும் கூறுகின்றனர்.
இரு சமூகங்களிடையே மோதல் உருவானதில் இருந்து ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும் இரு சமூகத்தினரையும் சந்தித்து பேசி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்