search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி பிறந்தநாள்"

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    • ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. திருப்–பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதிய உறுப்பினர் சேர்க்கை பணி குறித்தும், கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும் விளக்கி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான முறை–யில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.

    கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வருகிற 30-ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிமையை பெற்று தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணை செயலாளர்கள் குமார், நந்–தினி, சேகர், பொருளாளர் சாமிநாதன், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை பொதுக்–குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    ×