என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக சேவகா்"

    • பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கை.
    • ஜூன் 10-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் விருது வழங்கப்படவுள்ளது.

    இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தமிழகத்தை சோ்ந்தவராகவும், 18வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும், தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றியிருக்க வேண்டும். ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூகசேவகா் மற்றும் தொண்டு நிறுவனம் இருந்தால் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் ஜூன் 10-ந்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×