என் மலர்
நீங்கள் தேடியது "கண்ணாமூச்சி விளையாட்டு"
- வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.
- புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராயபுரம்:
புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது 7 வயது மகன் சாய். தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றுமாலை தேவேந்திரனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.
அப்போது சாய் தனது வீட்டின் பால்கனியில் உள்ள கேட்டை திறந்து வெளியில் இருந்த சிறிய தூணில் நின்று ஒளிந்து கொள்ள இறங்கினார்.
இதில் கால் தவறி அவன், 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.