search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை விழா"

    • மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.
    • அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன் பூங்கா என பல்வேறு சுற்றுலா அம்சங்களை இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.திருமூர்த்திமலையில், சுற்றுலாவை மேம்படுத்தவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், விடுமுறை காலத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.

    அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். சுற்றுலாத்துறை சார்பில் மாவட்டத்துக்கு தனியாக உதவி சுற்றுலா அலுவலர் நியமிக்கப்பட்ட பிறகு திருமூர்த்திமலையில் கோடை விழா நடத்தி வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகியுள்ளது. இந்தாண்டும் கோடை விழா குறித்த எவ்வித அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பழங்குடியின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    ×