என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கந்தன்"
- கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
- அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.
கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க
அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி தாலாட்டினர்.
சிவபெருமான் பிராட்டியாருடன் சரவண பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க,
ஆறு உருவங்களும் ஒரு உருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.
அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.
சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி "உங்களுக்கு மங்களம் உணடாகுக.
உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தை சூட்டுகிறோம்.
உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டவதாகு"
என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும்,
அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
- மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
- இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவது.
மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வற்றில் தீபத் திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விரதம் மிக முக்கியமானதாகும்.
இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.
நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்ததால், எல்லா முனிவர்களுக்கும் மேலான பதவி பெற்றார்.
இந்த நாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டி கவசம்,
சண்முகக் கவசம் படிப்பதும், கந்தபுராணம் கேட்பதும் நல்லது.
- இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
- சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும்.
முருகக்கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது.
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது.
ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
முருகன்:
முருகு என்றால் அழகு என்பார்கள். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.
இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
சரவண பவன்
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன்.
சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும்.
ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில்
மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.
ஆறுமுகம்(ன்)
சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது.
சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள்.
இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது.
குகன்
மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.
குமாரன்
கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள்.
ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.
கந்தன்
கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது.
விசாகன்
விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள்.
வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன்.
முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.
இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம்.
முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது.
ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.
வேலன்
வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர்.
முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.
சுப்பிரமணியம்
இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம்.
புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன்.
மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர்.
ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.
- அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம்.
- ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, முருகனை வேண்டினால், பிறவிப் பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால்,
அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.
அதே நேரம் வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு
பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது.
ஏனெனில் பாவங்களை சுட்டுப்பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன்,
மார்கழி மாதம் துவங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கிச் செல்கின்றான்.
முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக் கோலத்தில் நினைத்து தியானம் செய்து,
வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு,
ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்து வந்தால் முருகப்பெருமாளின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.
- இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
- அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.
சிதம்பரம்-சீர்காழி பேருந்து சாலையில் சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ ெதாலைவில் இருக்கிறது கொள்ளிடம்.
இத்தலத்தில் உள்ள புலீஸ்வரி அம்மன் மிகவும் பிரசித்தமானவள்.
இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
இக்கோயிலில் பங்குதி உத்திரத் திருவிழா நடக்கும் போது தான் அந்த அற்புதம் நிகழ்கிறது.
திருவிழாவின் முதல் நாள் இங்கு கொடியேற்றம் நடத்துவார்கள்.
அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.
திருவிழா நடக்கும் 10 நாட்களும் இம்மரத்தில் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்.
பதினோராம் நாள் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்து கொடியினை இறக்குவார்கள்.
அன்றைய தினம் தலமரமான குராமரத்தில் இருந்து எல்லா மலர்களும் உதிர்ந்து பேசுகின்றன.
தெய்வத் திருவிழாவான பங்குனி உத்திரவிழாவில் நடக்கும் இந்த அற்புதம் கண்டவர்கள் மெய்சிலித்துப் போவது கண்கூடான உண்மை.
- ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
- இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது
வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றே கந்தக் கடவுளுக்கும் உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது.
தெய்வத் திருமணங்கள் நடந்தேறிய இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது
மேலும் முருகப் பெருமானின் இச்சா சக்தியான வள்ளி அவதரித்த திருநாளும் இந்த பங்குனி உத்திர திருநாள் என கந்தபுராணம் பேசுகிறது.
திருமுருகன் மகிமைப் பெற்ற இந்நாளில் முருகன் திருத்தலங்கள் அனைத்தும் திருவிழா காண்கின்றன.
பங்குனிப் பெருவிழா காணும் பழனியில் பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து கந்தனை தரிசிப்பது வழக்கம்.
குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும்,தோஷங்கள் நீங்கவும் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து
ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
- திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.
- ஏராளமானவர்கள் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்றுள்ளனர்.
திருப்புகழ் பாடினால் திருமணம்
திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.
இதில் "விறல் மாரனைந்து" எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்.
திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.
சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ
விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிருந்து வெயில் காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசை கூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடி தான துன்ப மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே!
- ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
- குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.
சஷ்டி விரத நியதிகள் II
இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது.
மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.
ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பப்பூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.
உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும்.
- “ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.
- பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.
சஷ்டி விரத நியதிகள்
கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக் கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாபட்சர மந்திரத்தை எழுத வேண்டும்.
"ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.
கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும்.
தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும்.
தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் மட்டும் அருந்தி இருப்பது மிகவும் சிறப்பான விரதமாகும்.
பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.
பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.
- கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கடை பிடிக்கப்பட வேண்டும்.
- உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; கந்தசஷ்டியில் விரதமிருந்தால் "அகப்பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்;
கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக் கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.
வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது.
அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.
கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கடை பிடிக்கப்பட வேண்டும்.
உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி.
ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
- உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.
- சஷ்டியன்று அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும்
சஷ்டி விரதத்தின் ஒப்பற்ற சிறப்பு
கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா இந்த 3 அசுர சக்திகளையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும்.
உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.
உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழிமைப்பதே இந்த விரதத்தின் பெறும் பேறாக அமைகிறது.
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப் பெருமானது பேரருள் கிட்டும்.
சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!
சகல செல்வங்களையும், சுக போகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திர லாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும்.
- முடியுமளவு, உள்ளத்தூய்மையுடன் முருகப்பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறலாம்.
- எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள்.
சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம்
நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல் தான் இந்த விரதங்கள்.
நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம்.
வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம்.
வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம்.
முடியுமளவு, உள்ளத்தூய்மையுடன் முருகப்பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறலாம்.
எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே.
இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது.
எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்