என் மலர்
நீங்கள் தேடியது "நாராயண கவிராயர்"
- மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினர்.
- ம்மாணவ, மாணவிகளுக்கு நாராயண கவி நூல்கள் வழங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை, குட்டைத் திடலில் உள்ள நாராயண கவி நினைவு மணிமண்டபத்தில் நாராயண கவிராயரின் 42 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பாவலேறு தேன்தமிழ்ப் பாசறை கொழுமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உடுமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராசா, கனகு, ரங்கநாதன், இராமசாமி, சிவக்குமார்பணி நிறைவு நூலகர் கணேசன், நாராயணகவி மணிமண்டப நூலகர் ரவீந்திரன் மற்றும் முற்போக்கு அமைப்பினர் கலந்து கொண்டு மாலை அணிவித்துமரியாதை அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மணிமண்டப நூலகத்தில் போட்டித் தேர்விற்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு நாராயண கவி நூல்கள் வழங்கப்பட்டது. நிறைவாக கொழுமம் ஆதி நன்றி கூறினார்.