என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெங்களூரு மழை"
- முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
- மழையின் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
பெங்களூரு:
வளிமண்டல சுழற்சி காரணமாக பெங்களூரு, குடகு, மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரு ஆர்.ஆர்.நகர், கெங்கேரி, விஜயநகர், ராஜாஜிநகர், பேடராயனபுரா, சந்திரா லே-அவுட், ஞானபாரதி, நாகரபாவி, மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட், ஜெயநகர், பாகலூர் உள்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக சுரங்க பாதைகள், ரெயில்வே சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சும்மனஹள்ளி ஜங்ஷன், பாகலூர் கிராஸ், ஓசூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
மழையின் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பட்டாசுகள் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டது. சிட்டி மார்க்கெட்டில் பெய்த மழையின் காரணமாக அங்கு காய்கறி, பூக்கள், பழங்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
விஜயநகர் ஹர்பனஹள்ளி, ஹாவேரியில் தலா 4 செ.மீ. மழை, தார்வாட்டில் உள்ள தரிகெரே, சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரே, தும்கூர் மாவட்டம் திபட்டூர், ஷிமோகா மாவட்டம் பத்ராவதி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் 3-ந்தேதி வரை ஷிமோகா, ராமநகர், மைசூரு, மாண்டியா, குடகு, சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல், தேங்கியுள்ளது.
- வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது.
பெங்களூருவில் இன்று (அக்டோபர் 22) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல், தேங்கியுள்ளது.
மழைநீர் தேங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புப்படையினர் படகுகள் மூலம் மீட்டனர். தொடர் கனமழையில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு நகரின் சில பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் சூழ்ந்த வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது. பெங்களூருவை அடுத்த அல்லலசண்ட்ரா மற்றும் எலஹங்கா பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் மக்கள் மீன்களை பிடித்து சென்றனர்.
#WATCH | Karnataka: Locals were seen fishing at several places in Bengaluru amid waterlogging due to incessant heavy rain. Visuals from Allalasandra, Yelahanka. pic.twitter.com/9gYrjOI0FY
— ANI (@ANI) October 22, 2024
- ஆந்திரா, கர்நாடகாவில் இரவில் மழை வெளுத்து வாங்கியது. பகலிலும் மழை நீடித்தது.
- பணிகளுக்கு புறப்பட்டவர்கள் பரிதவித்தபடி சென்றனர்.
வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை மிதக்கும், இது வாடிக்கைதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது சென்னை நிலவரம் அல்ல. ஐ.டி. நகரமான பெங்களூருவில்தான் நிலைமை மோசமாகி இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக பெய்த கனமழை, இரவில் ஓய்ந்தது. ஆனால் ஆந்திரா, கர்நாடகாவில் இரவில் மழை வெளுத்து வாங்கியது. பகலிலும் மழை நீடித்தது. மன்யாதா டெக் பார்க் பகுதியில்தான் சாலை, கால்வாய்போல வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதில் கார்கள் நீந்தி செல்வதுபோல மெதுவாக ஊர்ந்து சென்றன.
இதனால் பணிகளுக்கு புறப்பட்டவர்கள் பரிதவித்தபடி சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது. சுமார் 2½ லட்சம் பேர் வீடியோவை பார்த்துள்ளனர்.
- பெல்லந்தூரில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழை நீர் நிரம்பியது.
- கனமழையால் எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. பரவலாக பெய்த கனமழையால் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக, பெங்களூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வர்தூர் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒயிட்பீல்ட் டவுன்ஷிப் பகுதியில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. பல மழைநீர் வடிகால்கள் நிரம்பி அருகில் உள்ள பகுதிகளில் மழைநீர்புகுந்தது.
மழை காரணமாக பெல்லந்தூர் ஏரி மட்டுமின்றி, ஹல்லேநாயக்கனஹள்ளி, வர்தூர் ஏரிகளும் நிரம்பின. கனமழையால் சாலைகள் தண்ணீரில் மூழ்கின. பெங்களூரு மாரத்தஹள்ளியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடுபிசனஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் தண்ணீர் புகுந்து பரபரப்பு ஏற்பட்டது.
பெல்லந்தூரில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழை நீர் நிரம்பியது. கனமழையால் எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வர்தூரில் பெய்த கனமழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி தெருவே ஆறு போல் காட்சியளித்தது.
மழையால் வர்த்தூர் சுற்றுவட்டாரப் பகுதிக்கு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், டவுன்ஹால், மாநகராட்சியை சுற்றிலும் மழை பெய்ததால், இரவில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பெங்களூருவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடம், தெற்கு உள்நாடு பெங்களூரு கிராமப்புறங்கள், பெங்களூரு நகரம், சிக்கபள்ளாப்பூர், கோலார் போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகா கடற்கரையில் மணிக்கு 40-45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
- கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பருவமழை காலத்துக்கு முன்கூட்டியே மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூருவில் கடந்த ஒரு மாதக்காலமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பேய் மழை கொட்டி வருகிறது. விடாமல் பெய்த மழையால் பெங்களூருவில் பல முக்கிய இடங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் எங்கும் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, பல சுரங்கப் பாதைகளும் மழை நீரில் முழுவதுமாக மூழ்கியதால் அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கே.ஆர். சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை நிரம்பியிருந்த மழை நீரில் மூழ்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது பெய்து வரும் மழையாலும் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது போன்ற சம்பவங்களில் சிலர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.
பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. மழையுடன் சேர்ந்து சூறைக்காற்றும் வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சரிந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்களும் சேதம் அடைந்ததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவாசிகள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இன்றும் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. பெங்களூரு மட்டுமின்றி, பழைய மைசூரு பகுதியும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் கிளைகள் உயர் அழுத்த மின்கம்பிகளில் மோதியதால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெங்களூருவின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சிலிக்கான் சிட்டி பகுதியில் 4 அடி ஆழ பள்ளம் உருவானது. இது கடந்த 15 நாட்களில் உருவாகும் மூன்றாவது பள்ளமாகும். இந்த பள்ளங்களால், நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நகரின் போக்குவரத்து பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. கன மழை காரணமாக கடந்த 3 மாதங்களில் 56 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த மழை பாதிப்பில் இருந்து பெங்களூரு மக்களை மீட்பதற்காக போர்க்கால நடவடிக்கைகளை தொடங்குமாறு நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். மேலும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் 60-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு அறைகளை திறக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
அதன்படி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த கட்டுப்பாட்டு அறைகளில் தொடக்கத்தில் 63 துணைப்பிரிவு அலகுகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜூன் 1-ந் தேதிக்குள் அவை செயல்பாட்டுக்கு வரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்