search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாஷ் மத்வால்"

    • கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியில் விளையாடும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
    • மத்வால் போன்ற இளைஞர்கள் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி லக்னோவை வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

    சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. இதனால் லக்னோவுக்கு 183 ரன் இலக்காக இருந்தது.

    கேமரூன் கிரீன் 23 பந்தில் 41 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 20 பந்தில் 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), நேகல் வதேரா 12 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டும், மோஷிகான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.3 ஓவர்களில் 101 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 27 பந்தில் 40 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். ஆகாஷ் மத்வால் 5 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். கிறிஸ் ஜோர்டான், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.


    இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    ஆகாஷ் மத்வால் கடந்த ஆண்டு மும்பை அணியுடன் துணை பந்துவீச்சாளராக இணைந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் சென்றதால் அவரை பயன்படுத்திக் கொண்டோம். அவர் திறமையான பந்துவீச்சாளர் என்று எனக்கு தெரியும். தனது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி உள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியில் விளையாடும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்த்து இருக்கிறோம். மத்வால் போன்ற இளைஞர்கள் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

    எங்களது பீல்டிங் செயல்பாடு மகிழ்ச்சியை அளித்தது.ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ்.
    • 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    அடுத்தடுத்து ஏற்பட்ட ரன் அவுட் உள்ளிட்ட காரணங்களால் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களிலேயே ஆட்டத்தை இழந்தது.

    இதில், மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஆகாஷ் மத்வால் கூறியதாவது:-

    என்னுடைய இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். ஆனால் என்னுடைய விருப்பம் கிரிக்கெட்டாக இருந்தது. 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன். இன்ஜினியர்கள் விரைவாக கற்றுக்கொள்பவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×