search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேராடூன்"

    • வந்தே பாரத் ரெயில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு 4 மணி 45 நிமிடங்களில் சென்றடையும்.
    • டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1065 ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லி - டேராடூன் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று துவங்கி வைக்கிறார். இது உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும். ரெயில் சேவை இன்று துவங்கப்படும் நிலையில், டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான முதல் ரெயில் சேவை மே 29 ஆம் தேதி துவங்கும் என்று ஐஆர்சிடிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் 302 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள டேராடூனுக்கு 4 மணி 45 நிமிடங்களில் சென்றடையும். வார நாட்களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

     

    கட்டண விவரங்கள்:

    டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1065 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்சிக்யூடிவ் சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1890 ஆகும். 22457 எண் கொண்ட இந்த ரெயில் ஆனந்த் விகார் ரெயில்வே நிலையத்தில் இருத்து 17.50 (5.50) மணிக்கு புறப்பட்டு டேராடூனுக்கு 22.35 (10.35) மணி அளவில் சென்றடையும்.

    டேராடூனில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் ஆனந்த விகார் ரெயில் நிலையத்திற்கு 11.45 மணிக்கு வந்தடையும். இடையில் மீரட், முசாபர்நகர், சகாரன்பூர், ரூர்கி மற்றும் ஹரித்வார் போன்ற ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும். இந்த ரெயிலில் மொத்தம் எட்டு கோச்கள் உள்ளன.

    தற்போதைய நிதியாண்டில் ஆறு வந்தே பாரத் ரெயில்கள் ராணி கமலாபேட்-ஹசரட் நிசாமுதீன், செகந்தராபாத்- திருப்பதி, சென்னை - கோயம்புத்தூர், அஜ்மீர் - டெல்லி கண்டோன்மெண்ட், திருவனந்தபுரம் செண்ட்ரல்-கசர்கோட், ஹவுரா- பூரி ஆகிய வழித்தடங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது.

    ×