என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமூகஆர்வலர்கள்"
- 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
- தமிழக அரசு ரூ.45 கோடி நிதியும் ஒதுக்கியது .
பல்லடம் :
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் 2-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரடிவாவி உள்வட்டம், சாமளாபுரம் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதற்கிடையே பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் பல்லடம் நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - பல்லடம் பகுதி தொழில் வளம் மிக்க பகுதியாகும். பனியன் கம்பெனிகள், விசைத்தறிக்கூடங்கள், தொழிற்சாலைகள், ஜவுளி உற்பத்தி ஆலைகள், காற்றாலை நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள் என தொழில் நிறுவனங்கள் உள்ளடக்கிய பகுதி ஆகும். மேற்கண்ட தொழில் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இதன் காரணமாக பல்லடம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. மேலும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது. விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை உயிருக்கு ஆபத்தான நிலைமையில் ஆம்புலன்ஸ் கொண்டு செல்வதற்கு கூட முடியாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க புறவழிச் சாலை அமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலமுறை போராட்டங்கள் நடத்திய காரணத்தால் கடந்த ஆட்சியில் பல்லடம் நகரை சுற்றி புறவழிச் சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக தமிழக அரசு ரூ.45 கோடி நிதியும் ஒதுக்கியது .கடந்த ஓராண்டுகளாக இந்த திட்டம் சம்பந்தமாக எவ்வித பணிகளும் நடைபெறாத காரணத்தினால் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது கைவிடப்பட்டுள்ளதா? என்ற அச்சம் பல்லடம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பல்லடம் புறவழிச்சாலை திட்டத்தை உடனே நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உதவி கலெக்டர் பல்லவி வர்மா, பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார்,பல்லடம் துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்