என் மலர்
நீங்கள் தேடியது "ஜி.பி.எஸ்."
- திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன.
- சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில் வாகன உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். மாநகர பொறியாளர் வெங்கடேஷ், துணை கமிஷனர் சுல்தானா, நகர் நல அலுவலர் கவுரி சரவணன் முன்னிலை வகித்தனர். மண்டல உதவி கமிஷனர்கள், பொறியியல் மற்றும் சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் முறையாக மாநகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும். சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் தான் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
உரிய அனுமதி பெற்ற அனுபவமிக்க ஊழியர்கள் மட்டுமே அந்த வாகனங்களை இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும். மாநகராட்சி சுகாதாரப்பிரிவினரின் வழிகாட்டி நடை முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.